ஒரு படி வேர்க்கடலை… ஒரு பெரிய பாடம்! | பொறுப்பின் உண்மையான அர்த்தம் | Tamil Moral Story
குடும்பப் பொறுப்பு
ஒரு ஊர்ல ஒரு வயசான தம்பதியர் வாழ்ந்து வந்தாங்க. அவர்களுக்கு ஐந்து மருமகள்கள் இருந்தாங்க. வயசான மாமியாருக்கு ஒரு யோசனை வந்துச்சு… இந்தக் குடும்பத்தோட பொறுப்பை யார்கிட்ட ஒப்படைக்கலாம்?
வேர்க்கடலை சோதனை
“ஒருநாள், அந்த ஐந்து மருமகள்களையும் கூப்பிட்டு, ஒவ்வொருத்தருக்கும் ஒரு படி வேர்க்கடலை கொடுத்தாங்க.
இதை பத்திரமா வைச்சுக்கோங்க… ஆறு மாசம் கழிச்சு நான் திரும்பக் கேட்பேன்’ன்னு சொல்லிட்டாங்க.
ஆறு மாதங்களுக்குப் பிறகு
ஆறு மாசம் போச்சு…
மாமியார் எல்லாரையும் கூப்பிட்டு வேர்க்கடலையைத் திரும்பக் கேட்டாங்க.
சில பேர், அதை சாப்பிட்டேனு சொன்னாங்க. இன்னொருத்தர், ‘நான் அப்படியே பத்திரமா வைச்சிருக்கேன்னு சொல்லி திருப்பிக் கொடுத்தாங்க.
ஐந்தாவது மருமகள்
ஆனா..ஐந்தாவது மருமகள் மட்டும் ஒரு பெரிய மூட்டை வேர்க்கடலையோட வந்தாங்க!
மாமியார் ஆச்சரியமா, இவ்வளவு வேர்க்கடலை எங்கிருந்து வந்துச்சு?அப்டினு கேட்டாங்க. அதுக்கு அவங்க, ‘நீங்க கொடுத்த வேர்க்கடலையை விதைச்சேன். அது நல்லா வளர்ந்து, இவ்வளவு வேர்க்கடலை கிடைச்சுது’ன்னு சொன்னாங்க.
பொறுப்பை ஒப்படைத்தார்
அதைப் பார்த்த மாமியாருக்கு ரொம்ப சந்தோஷம்.
பொறுப்பைக் கொடுத்தா, அதை அப்படியே காப்பாத்துறது மட்டும் போதாது… அதை நல்லா பயன்படுத்தி வளர்க்கவும் தெரிஞ்சிருக்கணும்’ன்னு புரிஞ்சுக்கிட்டாங்க.
அதனால குடும்பத்தோட பொறுப்பை ஐந்தாவது மருமகள்கிட்டயே ஒப்படைச்சிட்டாங்க.
நீதி✨
கொடுக்கப்பட்ட பொறுப்பை அப்படியே பாதுகாப்பது மட்டும் போதாது. அதை சரியாகப் பயன்படுத்தி வளர்ச்சியாக மாற்றத் தெரிந்தவரே உண்மையான பொறுப்புள்ளவர்.
வாழ்க்கை பாடம் ⭐
"பொறுப்பை ஏற்றுக்கொள்வது ஒரு கடமை; அதை நல்ல முறையில் பயன்படுத்தி பலன் உருவாக்குவது ஒரு திறமை."
Comments
Post a Comment
Thanks for reading with my Articles