குருவின் நல்ல உள்ளம் | அன்பை மதிக்க கற்றுத்தரும் அழகான தமிழ் நீதிக்கதை
ஒரு முனிவர் தனது சீடர்களுடன் பயணம் செய்துகொண்டிருந்தார். வழியில் ஒரு ஏழைப் பெண் அவர்களை அன்புடன் தனது வீட்டிற்கு அழைத்து தன்னிடம் இருந்த திராட்சைப் பழங்களை கொடுத்தாள்.
முனிவர் ஒரு திராட்சையை சாப்பிட்டுப் பார்த்தார். அது மிகவும் புளிப்பாக இருந்தது. இருந்தாலும் அந்தப் பெண்ணின் அன்பை மதித்து திராட்சைப் பழங்கள் அனைத்தையும் அவரே சாப்பிட்டார்.
இதைப் பார்த்த சீடர்கள் ஆச்சரியப்பட்டு குருவே, எங்களுடன் எப்போதும் பகிர்ந்து கொள்வீர்கள். இந்தப் பழங்களை மட்டும் ஏன் தனியாக சாப்பிட்டீர்கள்? என்று கேட்டனர்.
முனிவர் சிரித்தபடி, அந்தப் பெண் தன்னிடம் இருந்ததை அன்புடன் கொடுத்தாள். அது புளிப்பாக இருந்தது என்று நான் கூறினால், அவளுடைய மனம் புண்படும் அவளுடைய அன்பை மதிப்பதே முக்கியம் என்றார்.
சீடர்கள் குருவின் நல்ல உள்ளத்தைப் புரிந்துகொண்டனர்.
🌱 கதையின் நீதி
பிறர் கொடுப்பதில் குறை காணாமல், அதில் இருக்கும் அன்பையும் உணர்வையும் மதிக்க வேண்டும்.
Comments
Post a Comment
Thanks for reading with my Articles