“கரை சேர வேண்டியவன், எதைப் பிடிக்கிறான்?” — சரியான வழிகாட்டியைத் தேர்ந்தெடுப்பதே வெற்றியின் முதல் படி
கதை:
1ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியபோது, அக்கரைக்குச் செல்ல ஓடம் ஏதும் இல்லாததால் இருவர் கரையில் நின்று கொண்டிருந்தனர்.
2,அப்போது வந்த ஒரு காளை மாடு ஆற்றில் குதித்து நீந்தியது. ஒருவன் காளையின் வாலைப் பிடித்துக்கொண்டு பாதுகாப்பாக அக்கரையைக் கடந்தான்.
3,இதைப் பார்த்த மற்றவன், தானும் ஒரு வாலைப் பிடித்துச் செல்லலாம் என எதிர்பார்த்தான். அப்போது ஒரு நாய் ஆற்றில் குதிக்க, அவனும் அதன் வாலைப் பிடித்துக்கொண்டான்.
4,ஆனால், நாயால் அவனது எடையைத் தாங்கி நீந்த முடியாமல் திணறி 'வால்... வால்...' என்று கத்தத் தொடங்கியது.
5,விளைவு & கருத்து: இருவருமே ஆற்று நீர் போகும் திசையிலேயே மிதந்து போய்க் கொண்டிருந்தார்கள்; அவர்கள் செல்ல வேண்டிய திசை வேறு, அவர்கள் போன திசை வேறு.
6,வாழ்க்கைக் கருத்து: கரை சேர நினைக்கும் மனிதர்களின் கதை இது. சிலர் முயற்சியின்றி கரையிலேயே நின்று விடுகிறார்கள். சிலர் பலமான வழிகாட்டியைப் பற்றி (காளையின் வால்) கரையேறுகிறார்கள். சிலர் தகுதியற்றவர்களைப் பின்பற்றி (நாயின் வால்) இலக்கை அடைய முடியாமல் தவிக்கிறார்கள்
Comments
Post a Comment