“தன்னம்பிக்கை பற்றிய கதை”

காட்சி 1:  ஒருவரின் விலை உயர்ந்த மகிழுந்தை ஒரு சிறுவன் வியப்புடன் பார்ப்பதைப் பார்த்தார்.


காட்சி 2:  அந்த சிறுவனின் ஆசையை அறிந்து கொண்ட அவர் சிறுவனை உட்காரவைத்து கொஞ்ச தூரம் ஓட்டினார்.


காட்சி 3:  “உங்களின் வாகனம் மிக அருமையாக இருக்கிறது, என்ன விலை?” என சிறுவன் கேட்டான். 

காட்சி 4:  அவரோ தெரியவில்லை, இது என் சகோதரன் எனக்கு பரிசளித்தது என்றார் அந்த மனிதர்.

காட்சி 5:  அப்படியா!! அவர் மிகவும் நல்லவர் என சிறுவன் சொல்ல,

காட்சி 6: “நீ என்ன நினைக்கிறாய் என எனக்குத் தெரியும், உனக்கும் என் சகோதரனைப் போல ஒரு சகோதரன் வேண்டும் என நினைக்கிறாய் அல்லவா?” என்றார்.

காட்சி 7:  சிறுவன் சொன்னான். “இல்லை, நான் அந்த உங்கள் சகோதரனைப் போல இருக்கவேண்டும் என நினைக்கிறேன்” என்றான்.

கருத்து :  பிறரிடமிருந்து பெற வேண்டும் என்று நினைப்பதைவிட, நம்மால் முயற்சித்து பெற வேண்டும் என்ற தன்னம்பிக்கையே சிறந்தது.

 

Thanks for watching ✨ 

Comments

Popular posts from this blog

பலவீனமே சிறந்த பலம்

புத்தியை தீட்டு!!

பொய் கூறுவதனால் வந்த விளைவு ஒரு குட்டி Story