மனம் தளராதே !! நீதி கதைகள்.

வாழ்க்கையில் துன்பம் கண்டு உன் மனம் தளராதே!!


காட்சி 1: மடத்தில் ஜென் துறவி ஒருவர் சீடர்களுக்கு பாடம் சொல்லிக் கொடுத்து கொண்டிருந்தார். 

காட்சி 2: அப்போது அவர் சீடர்களுக்கு துன்பம் வந்தால் தன்னம்பிக்கையுடன் மனதை தளராமல் இருக்க வேண்டும் என்ற ஒரு புத்தியை அவர்களுக்கு புகட்டுவதற்கு ஒரு சிறு கதை சொல்லி புரிய வைக்க நினைத்தார்.

காட்சி 3: அதனால் அவர் ஒரு எறும்பு கதையை தன் சீடர்களுக்குச் சொன்னார்.

காட்சி 4:   அதாவது, "ஓர் எறும்பு தன் வாயில் சற்று நீளமான உணவுப் பொருளை தூக்கிச் சென்றது. 

காட்சி 5:  அப்போது அது செல்லும் வழியில் ஒரு விரிசல் தென்பட்டது. அதனால் அந்த எறும்பு அதை தாண்டிச் செல்ல முடியாமல் தவித்தது.

காட்சி 6: சற்று நேரம் கழித்து, அந்த எறும்பு தன் உணவை அந்த விரிசல் மீது வைத்து, அதன் மீது ஊர்ந்து சென்று விரிசலைக் கடந்து, பின் தன் உணவை எடுத்துச் சென்றது" என்று கூறினார்.

காட்சி 7: பின் அவர்களிடம், "அதேபோல் தான் நாமும் நமக்கு ஏற்படும் துன்பத்தையும் பாலமாக வைத்து, முன்னேற வேண்டும்" என்று கூறினார்.

காட்சி 8: மேலும் அந்த சிறு எறும்பின் தன்னம்பிக்கை நமக்கு இருந்தாலே நாம் வாழ்வில் எந்த தடையையும் எளிதாக கடந்து செல்ல முடியும், துன்பமும் காணாமல் போய்விடும் என்று கூறி, அன்றைய பாடத்தை முடித்தார்.

கருத்து/நீதி: தன்னம்பிக்கையுடன் முயற்சி செய்தால் எந்தத் தடையையும் கடக்க முடியும்.


Thanks for watching ✨ 

Comments

Popular posts from this blog

பலவீனமே சிறந்த பலம்

புத்தியை தீட்டு!!

பொய் கூறுவதனால் வந்த விளைவு ஒரு குட்டி Story