“ஒற்றுமையே பலம் – குழந்தைகளுக்கான சிறந்த தமிழ் நீதிக்கதை”
ஒற்றுமையே பலம் கூடி வாழ்ந்தால் கோடி நன்மை என்ற பழமொழிக்கேற்ப ஒற்றுமை எவ்வளவு முக்கியமானது என்பது பற்றி இக்கதையில் விரிவாக காண்போம்!!
காட்சி 1
ஒரு பெரியவருக்கு நான்கு மகன்கள், நாள்வரும் எப்போதும் சண்டை போட்டுக் கொண்டே இருப்பார்கள்.
காட்சி 2
அதை கண்டு அவர் மிகவும் வருத்தம் அடைந்தார். ஒற்றுமையாக இருங்கள் என்று கூறியும் அவர்கள் முடியாது எனக் கூறிவிட்டார்கள்.
காட்சி 3
ஒரு நாள் அவருக்கு உடல் நலம் சரி இல்லாமல் போகவே, அவர்களுக்கு பாடம் புகட்ட ஒரு போட்டியை வைத்தார்.
காட்சி 4
நால்வரையும் அழைத்துக்கொண்டு விறகு கொம்புகளை கொண்டு வரச் சொன்னார், அவர்களும் கொண்டு வந்தார்கள்.
காட்சி 6
பிறகு ஒருவரையும் அழைத்து அந்த கட்டிய கொம்புகளை உடைக்கச் சொன்னார். யாராலும் முடியவில்லை.
காட்சி 7
பிறகு கட்டுகளை அவிழ்த்து ஒவ்வொன்றாக கொடுத்து உடைக்கச் சொன்னார், அனைவரும் சுலபமாக உடைத்தார்கள்.
காட்சி 8
ஒற்றுமையோட பலம் என்னவென்று இப்போ தெரியும்னு நினைக்கிறேன். நீங்க நாலு பேரும் நான்கு கொம்புகளை போலதான். ஆனால் ஒற்றுமையாக இருந்தால் யாரும் உங்களை அசைக்க முடியாது என்று கூறினார்.
காட்சி 9
நான்கு மகன்களுக்கும் ஒற்றுமையின் பலம் புரிந்தது. அன்றிலிருந்து நால்வரும் சண்டையிடாமல் ஒற்றுமையாய் வாழத் தொடங்கினார்கள்
நீதி:
“ஒற்றுமையே பலம்.”
நாம் ஒற்றுமையாக இருந்தால் எந்தச் சிரமத்தையும் எதிர்கொள்ள முடியும். ஆனால் பிரிந்து இருந்தால் எளிதில் பலவீனமாகி விடுவோம்.










Comments
Post a Comment